பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.8.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை, திருவள்ளூர், சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்ளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான பள்ளி, கல்லூரி கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. அதில், சென்னை தண்டையார்பேட்டையில் ரூ.3.62 கோடி மதிப்பீட்டிலும், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டிலும், சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டையில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டிலும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் ரூ.90 லட்சம் என மொத்தம் ரூ.8.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
Discussion about this post