காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் 370வது சட்டப்பிரிவை நீக்கியதை ஆதரிப்பதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
370வது சட்டப்பிரிவை நீக்கியதன்மூலம் காஷ்மீரில் தொழில்கள் வளர்ந்து வேலைவாய்ப்பு பெருகிப் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனப் பெரும்பான்மை மக்கள் கருதுவதாக அஜித் தோவல் தெரிவித்துள்ளார். ஒருசிலர் மட்டுமே அதை எதிர்த்து வருவதாகக் கூறியுள்ளார். மாநிலக் காவல்துறையினரும் மத்தியப் படையினரும் சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் ராணுவத்தின் அத்துமீறல் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தரைவழித் தொலைபேசித் தொடர்பு முழுவதும் செயல்படுவதாகவும், 92 விழுக்காடு நிலப்பரப்பில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், மற்ற பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களைக் காப்பதற்கே கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும் அஜித் தோவல் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post