சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 73 ஆயிரம் கன அடியிலிருந்து 76 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 119.34 அடியாகவும், நீர் இருப்பு 92.34 டி.எம்.சியாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விரைவில் மொத்த நீர் தேக்க உயரமான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர் அளவால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து பாசனத் தேவைக்கு வினாடிக்கு 32 ஆயிரத்து 500 கனஅடியும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Discussion about this post