சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்பிட்டர் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு நிலவு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து செப்டம்பர் 2ஆம் தேதி, லேண்டர் பிரிந்தது. இதையடுத்து லேண்டரும், ஆர்பிட்டரும் தனித்தனியாக நிலவைச் சுற்றி வந்தன. இந்நிலையில் லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்பிட்டர் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறது. 365 நாட்களுக்கு ஆர்பிட்டர் நிலவில் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட உள்ளது.
இதற்கிடையில் சந்திரயான்-2 திட்டம் 95% வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் 2 விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து வெற்றிகரமாக தன்னுடைய பயணத்தை பூர்த்தி செய்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர்கள் ஆர்பிட்டர் 365 நாட்களுக்கு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டனர். ஆர்பிட்டர் நிலவின் பல்வேறு புகைப்படங்களை விரைவில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post