இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து நாடே பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் முயற்சியில், எதிர்பாராத விதமாக சந்திரயான் விண்கலத்தின், விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இந்நிலையில் இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்த பிரதமர் மோடி, இஸ்ரோ அடைந்துள்ள இலக்கு மிகப்பெரியது என்று குறிப்பிட்டார். வெற்றியும் தோல்வியும் சகஜமானது எனக் குறிப்பிட்ட பிரதமர், இந்த தருணத்தில் விஞ்ஞானிகள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அறிவுரை வழங்கினார்.
Discussion about this post