டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்கு முறைப்படுத்தும் குழு கூட்டம், குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
காவிரி நதி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்று 15வது கூட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தமிழகம் சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கோபி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
Discussion about this post