கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் நடத்த வாகன சோதனையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் கேரளா பதிவு எண் கொண்ட வேன்கள் களியக்காவிளை – கொல்லங்கோடு தடங்களில்அரசு பேருந்துகளுக்கு முன்னால் பயணிகளை ஏற்றி டிக்கெட் வசூல் செய்வது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இதனால் அரசு பேருந்துகளுக்கு போதிய வருவாய் இல்லாம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் , மேலும் உரிய அனுமதி இல்லாமல் சட்டத்திற்க்கு புறம்பாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரை தொடர்ந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் ஆய்வாளர் சத்தியகுமார் தலைமையில் கொல்லங்கோடு , ஊரம்பு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் பயணிகளை ஏற்றி களியக்காவிளை நோக்கி வந்த வேனை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த கும்பல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியகுமாரை சரிமாரியாக தாக்கினர். இதனை தொடர்ந்து கொல்லங்கோடு காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post