எலும்பு முறிவு மற்றும் மஜ்ஜைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை தான் சிறந்தது என மேற்கத்திய மருத்துவம் கூறினாலும், நமது பாரம்பரிய மருத்துவத்தை அடிப்படையாக கொண்ட புத்தூர் கட்டு, அறுவை சிகிச்சை இன்றி எளிதில் குணப்படுத்துகிறது.
சித்த மருத்துவம் என்பது நமது முன்னோடிகளான 18 சித்தர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட இந்த பாரம்பரியமிக்க மருத்துவ முறை நமது தமிழ் மொழியில் இருப்பது மேலும் பெருமைக்குறியது. அதனை அடிப்படையாக கொண்டு தான் சித்த மருத்துவம் என்று சொல்லப்படும் பி.எஸ்.எம்.எஸ் என்ற பட்டப்படிப்பு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், புத்தூர் கட்டானது எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு தருவதாக கூறுகிறார் சித்த வைத்தியர்.
ஆங்கில மருத்துவத்தில் எலும்பு சிதைவு, விரிசல் மற்றும் மஜ்ஜைகளில் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை பெற்று முழு பரிசோதனை செய்ய வேண்டும். பிறகு அறுவைசிகிச்சை செய்து பிளேட் வைத்தால் எலும்பு பிடிப்பிற்கு ஓட்டைகள் போட வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, குறிப்பிட்ட காலத்தில், மீண்டும் பிளேட்டை அகற்ற வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் எளிமையான வழியில் செய்யப்படுவதே சித்த வைத்திய முறையிலான புத்தூர் கட்டு. எலும்பு பிரச்சனைகள் குணமாக, வயதிற்கு ஏற்றார் போல் நாட்கள் ஆகும். மூலிகையைக் கொண்டும் மூங்கில் பத்தைகளைக் கொண்டும் நாட்டு துணியால் கட்டுபோடப்படும் இந்த வைத்திய முறைக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
பரம்பரியமிக்க இந்த வைத்திய முறைகள் சார்ந்த ஆய்வுகள், பட்டபடிப்புகள் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதும், பயிற்சி பெறும் மாணவர்களை ஊக்கபடுத்த வேண்டும் என்பதும், எலும்பு சார்ந்த இந்த வைத்திய முறைகளை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டியதே அனைவரது கடமையும், எதிர்பார்ப்பாகும்…
Discussion about this post