காஷ்மீரின் பாஹ் – கோட்லி எல்லை பகுதி அருகே பாகிஸ்தான் தனது 2 ஆயிர ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் போர் ஒப்பந்ததை மீறி எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரிலுள்ள பாஹ் – கோட்லி எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தனது 2 ஆயிர ராணுவ வீரர்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச கவனத்தை ஈர்க்கவும், எல்லையில் பதற்றமான நிலை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் இதே போன்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post