அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், மேலும், 2 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க்கில் நேற்று நடந்த தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் 2 ஆயிரத்து 780 கோடி அளவிற்கு முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நியூயார்க்கில் “யாதும் ஊரே” எனும் தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். நியூயார்க் பயணம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post