வங்கி கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகிறது என்றும், அதன்படி குறைக்கப்பட்ட வட்டி விகிதம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைப்பதில் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் தற்போது உள்ள வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post