தேனி மாவட்டம் குரங்கணி மலை முதல் டாப் ஸ்டேஷன் வரை மலையேற்றத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட தமிழக அரசு, மலையேற்றத்திற்கும் தடை விதித்தது. மேலும் விபத்து குறித்து விசாரிக்க பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அதுல்யா மிஸ்ராவை நியமித்தது. குரங்கணி பகுதி பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய அதுல்யா மிஸ்ரா பல்வேறு பரிந்துரைகளுடன் அறிக்கை தாக்கல் செய்தார். இக்குழுவின் பல்வேறு பரிந்துரைகளை ஆய்வு செய்த தமிழக அரசு மலையேற்றத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. மலையேறும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post