இரண்டாவது முறையாகத் தான் அதிபரானால், சீனாவுடனான வணிக ஒப்பந்தம் மிகவும் கடினமானதாகி விடும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா – அமெரிக்கா இடையே வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு தோல்வி அடைந்ததையடுத்து நிலைமை மோசமாகியுள்ளது. 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா அண்மையில் கூடுதல் வரி விதித்தது. இதே பாணியில் சீனாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதுதொடர்பாகப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளச் சீனா விரும்புவதாகக் குற்றம்சாட்டினார். ஆனால் அதுவரை காத்திருக்கும் பட்சத்தில், சீனாவின் வேலைவாய்ப்புகளும், நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும், ஒருவேளை மீண்டும் தாம் அதிபராகத் தேர்வானால் வணிக ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானதாகி விடும் என்றும் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post