ஒருவர் முகத்தை பார்த்தவுடன் பளிச்சென தெரிவது உதடு தான்.சிலருக்கு சத்து குறைப்பட்டால் உதட்டில் கருமை படர்ந்திருக்கும்.அந்த கருமையை நீக்கி உங்களின் உதட்டை சிவப்பாக மாற்ற அருமையான 5 டிபஸ் இதோ..
1.எலுமிச்சையை துண்டு துண்டாக நறுக்கி, அதில் சர்க்கரையை வைத்து உதட்டில் தேய்த்து வந்தால் உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி உதட்டை சிவப்பாக மாற்றும்.இதனை தினமும் ஒரு முறை செய்து வரலாம்.
2.சர்க்கரையுடன் அரை கரண்டி ஆலிவ் எண்ணெய்யை சேர்ந்து உதட்டை நன்றாக scrub செய்து வந்தால், உதட்டை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ளும்.
3.தேனில் ஒரு துளி ரோஸ் வாட்டரை கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
4.மாதுளை, கேரட், பீட் ரூட் சாறு ஆகிய மூன்றையும் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.மேலும் மாதுளை விதையை அரைத்து பாலுடன் கலந்து உதட்டிற்கு scruber -ஆக பயன்படுத்தலாம்.இதனை தினமும் செய்து வரலாம்.
5.பாதாம் எண்ணெய் உதட்டில் படிந்துள்ள கருமையை நீக்கும்.இரவு தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெய்யை உதட்டில் தடவிவிட்டு உறங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.இதனை எலுமிச்சை சாறுடனும் சேர்த்து பயன்படுத்தலாம்.
Discussion about this post