பிரபாஷ் நடிப்பில் வெளிவந்த சாஹோ திரைப்படமானது,தனது படத்தின் கதையை திருடி எடுக்கப்பட்டது எனக் கூறி french இயக்குநர் ஜெரோம் சாலே தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக பதிவிட்டுள்ளார்.
பாகுபலி திரைப்படம் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர் பிரபாஷ்.பாகுபலி 1,பாகுபலி 2 ரசிகர்களிடையே எதிர்பார்க்காத வரவேற்பை பெற்றது.அடுத்து 300 கோடி மதிப்பில் சாஹோ திரைப்படத்தில் பிரபாஷ் நடித்தார்.இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.இந்த படமானது ஆகஸ்ட் 30 ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியானது.
இந்நிலையில் சாஹோ படத்தினை பார்த்த french இயக்குநரின் ரசிகர்கள் சிலர் 2008-ம் ஆண்டு வெளியான ’லார்கோ வின்ச்’ என்ற பிரெஞ்சு படத்தினையும், சாஹோ படத்தினையும் ஒப்பிட்டு கலாய்த்து ஜெரோம் சாலேவையும் tag செய்துள்ளனர்.இதனை கண்ட french இயக்குநர் ’லார்கோ வின்ச்’ திரைப்படத்தின் இரண்டாவது ‘freemake- ஆனது முதலாவதைப் போலவே மோசமானது.’தெலுங்கு இயக்குநர்களே எனது படத்தை திருடினால் அதை சரியாவது செய்யலாமே’ என நக்கலாக பதிவிட்டுள்ளார்.
Discussion about this post