கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெண் கொலை வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் தனது மனைவி ரேவதிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்புள்ளதை அறித்த அவரின் கணவர், இதுகுறித்து ரேவதியின் தந்தையிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது மகள் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளவரிடம் விசாரித்த போது, இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ரேவதி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ரேவதியின் தந்தை உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post