தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ் நகரில் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், தீவிரவாதிகளுக்கு பண உதவி உள்பட அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். பாகிஸ்தானின் தீவிரவாத செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாகவே நடப்பதாக தெரிவித்த ஜெய்சங்கர், 2016-ஆம் ஆண்டு பதான்கோட் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடன், இந்தியா எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை என்றார். காஷ்மீரில் பாதுகாப்பு கருதி அமல்படுத்தப்பட்டுள்ள தடைகள் முற்றிலும் நீக்கப்படும் என்றும், காஷ்மீரில் இணைய சேவை மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தீவிரவாத செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post