அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியான பிறகு முதல் முறையாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, செப்டம்பர் 8 ந்தேதி அங்கு செல்கிறார்.
2 நாள் பயணம் மேற்கொள்ளும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், வடகிழக்கு கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில், 8 வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்களும், முதலமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். அக்கூட்டத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டதால் எழுந்த சர்ச்சை மற்றும் அதற்கு பிந்தைய பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இதுபோல், அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலை, அமித் ஷா தனியாக அழைத்து பேசுகிறார். மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
Discussion about this post