அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் இரண்டு செட்களில் பின்னடைவைச் சந்தித்த நிலையில் காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்தனிஸ் லாஸ் வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 24ஆம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்தனிஸ்லாஸ் வாவ் ரிங்கா ஆகியோர் விளையாடினர்.
முதல் இரண்டு செட்களிலும் ஆறுக்கு நான்கு, ஏழுக்கு ஐந்து என்கிற கணக்கில் ஸ்தனிஸ்லாஸ் முன்னிலை பெற்றார். இந்நிலையில் மூன்றாம் செட்டில் காயமடைந்த நோவக் ஜோகோவிச் ஆட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் ஸ்தனிஸ்லாஸ் வாவ் ரிங்கா காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள காலிறுதிஆட்டத்தில் அவர் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவை எதிர்கொள்கிறார்.
Discussion about this post