இந்திய ரயில்வே துறைக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், தட்கல் டிக்கெட் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
ரயிலில் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வசதிக்காக, தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கடந்த 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இந்த முறையானது, 2004ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 50 சதவீத தட்கல் ஒதுக்கீடு டிக்கெட்டுகள் டைனமிக் கட்டண முறையைப் பயன்படுத்தி விற்கப்படுகின்றன.
Discussion about this post