ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா கூட்டுப்படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஏமன் நாட்டின் தலைநகரான சனா மற்றும் துறைமுக நகரான ஏடனில் முக்கிய பகுதிகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க அரசு ஆதரவுப் படையினர் போராடி வருகின்றனர். அரசுப் படையினருக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப் படையினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சவுதி அரேபியா கூட்டுப்படையினர் ஹவுத்தி போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைச்சாலையை குறிவைத்து வான்வெளித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிறைச்சாலையில் இருந்த 60 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
Discussion about this post