திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கோவில் கோபுரங்கள், தெப்பக்குளம், கோவில் வளாகம், நடைபாதை மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் வாசலில் மலர்களால் கோலமிட்ட பெண்கள் வழிபாடு நடத்தினர். இதோடு மட்டுமல்லாமல் ஏராளமான பக்தர்கள் கற்பக விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Discussion about this post