நேற்று ஒரே நாளில் மட்டும் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் ஆன்லைன் மூலமாக, வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
2018-19 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், நேற்று ஒரே நாளில் மட்டும் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் ஆன்லைன் மூலம், வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 3 லட்சத்து 87 ஆயிரத்து 571 பேர் வீதம் வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம், ஆன்லைனில் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
காலக்கெடு நீட்டிக்கப்படாததால் ஆன்லைன் மூலம் பயனாளிகள் தங்களது வருமான வரியை நேற்று முந்திக் கொண்டு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post