பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை காண அவரது ரசிகர் 900 கி.மீ நடந்தே சென்று சந்தித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அக்ஷய் குமாரை துவார்காவிலிருந்து மும்பை வரை 900 கி.மீ நடந்தே சென்று அவரின் ரசிகர் பிரபாட் சந்தித்துள்ளார். இந்த பயண முடிவதற்கு 18 நாட்கள் ஆகியுள்ளது. ஒரு ரசிகர் இத்தனை நாட்கள் தன்னை காண நடந்தே வந்த தருணத்தை வெளிப்படுத்தும் விதமாக அக்ஷய் குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் பிராபாட் உடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ -வை பதிவிட்டுள்ளார்.
இந்த நெகிழ்ச்சி தருணம் அனைவரின் மனத்தை கவர்ந்ததுடன் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அக்ஷய் குமாரின் ரசிகரான பிராபாட் 900 கி.மீ தேசிய கொடியை முதுகில் கட்டிக் கொண்டே நடந்து வந்தது குறிப்பிடதக்கது.
Discussion about this post