நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல், ஒன்று மற்றும் இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குளிர்பானங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும், பசுமை நிறைந்த மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவிலான, சூற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், அதிக அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த படுவதால் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் நீலகிரி மாவட்டத்தில் ஒன்று மற்றும் இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 180 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் ஏற்படுத்தப்பட்டு, ஐந்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post