மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 416 ரன்கள் குவித்த நிலையில் பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆண்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் கிங்ஸ்டனில் தொடங்கிய 2வது போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் நாளில், பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் பண்ட் 27 ரன்னிலும் ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழக்க ஹனுமன் விஹாரி சிறப்பாக ஆடி 111 ரன்கள் குவித்தார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த இஷாந்த் ஷர்மா 57 ரன்கள் எடுத்த்டார். இதனால் இந்திய அணி 416 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் சாம்பெல் 10 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து களம் இறங்கிய டேரன் பிராவோ, ஷாமர் ப்ரோக்ஸ், ரோஸ்டன் சாஸ் ஆகிரோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்த ஜஸ்பிரீத் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்த 3 வது இந்தியரானார்.
Discussion about this post