சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படவுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது
சுவிஷ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே கடந்த 2ஆயிரத்து 16 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தத்தில் 2 ஆயிரத்து 19 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தங்கள் நாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகள் வைத்துள்ளவர்களின் விவரங்களை வழங்க சுவிஷ் அரசு ஒப்புக்கொண்டது. இதனடிப்படையில் இன்று முதல் ரகசிய வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை வெளியிடப்படவுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2 ஆயிரத்து 18 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருந்த இந்தியர்களின் விவரங்கள் மத்திய அரசுக்கு கிடைக்கும். கறுப்புப் பணத்திற்கு எதிரான மத்திய அரசின் முக்கிய சாதனையாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
Discussion about this post