மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து, வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீர், தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் வரத்து, வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் 24 வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நிபந்தனைகளுடன் பரிசல்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9வது நாட்களாக 117 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 10ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 800 கன அடியாகவும் உள்ளது.
Discussion about this post