ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பள்ளிக்கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பிறந்த 18 வயது வரையிலான குழந்தைகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் மனநல மருத்துவர்கள், இயன்முறை மருத்துவர்கள், காது, மூக்கு ,தொண்டை மருத்துவர்கள், கண் மருத்துவர், ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வீல் சேர், காது கேட்கும் மிஷின்கள், தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் ஆகியவற்றிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
Discussion about this post