காதலிக்கு தெரியாமலே அவளின் வங்கி கணக்கில் ஆடம்பர பொருட்கள் வாங்கி ஏமாற்றிய கொல்கத்தா வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள அம்ஹெர்ஸ்ட் தெருவில் வசிக்கும் கல்லூரி பெண்ணும் சுஷோவன் சஹா என்பவரும் 6 மாத காலமாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் திடீரென கல்லூரி பெண்ணின் வீட்டிற்கு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் வந்துள்ளனர். என்னவென்று விசாரித்தப்போது அவர்கள் கூறிய தகவல் அந்த பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவருக்கே தெரியாமல் அவரின் வங்கி கணக்கில் சுஷோவன் சஹா, EMI – யில் மோட்டார் சைக்கிள், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி , மொபைல் ஆகியவை வாங்கியுள்ளார். இதற்கு EMI செலுத்தாததால் தொகையை வசூலிக்க நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது. என்ன செய்வதென அறியாத கல்லூரி பெண், காதலனை தொடர்புக் கொள்ள முயற்சி செய்த போது அவன் தப்பி ஓடியது தெரிய வந்தது. இதுகுறித்து அம்ஹெர்ஸ்ட் தெரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுஷோவன் சஹாயை கைது செய்தனர்.
Discussion about this post