விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்காக அதிமுக சார்பில் இலவச டேங்கர் லாரி வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவித்தனர். இதையடுத்துத் தமிழகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் நியூஸ் ஜே தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாடக் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக இலவசமாகத் தண்ணீர் டேங்கர் லாரி வழங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்படி சமூக ஆர்வலர் சுப்பிரமணி, விக்கிரவாண்டி அதிமுக நிர்வாகிகள் இலவசத் தண்ணீர் டேங்கர் லாரியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைத் தலைவர் சங்கரநாராயணனிடம் ஒப்படைத்தனர். இலவசத் தண்ணீர் டேங்கர் லாரி வழங்கியதற்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post