அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், இதில் இடம் பெறாதவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில், அண்டை நாடான, வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக வசிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதன்படி, அசாமை சேர்ந்தவர்களுக்கு தகுந்த சான்றிதழ்களை கொடுத்து, தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலையில், வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக, மறு பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்து வந்தது. இன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளதால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post