ஒவ்வொரு மாணவிகளின் பிறந்தநாளன்றும் மரக்கன்று நடும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வரும் விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பலரது பாராட்டை பெற்று வருகிறது.
விருதுநகரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 552 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்வியாண்டு முதல் பசுமை படை அமைப்பின் மூலம் பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளியில் பயிலும் மாணவிகளின் பிறந்தநாள் அன்று அந்த மாணவியின் கையால் மரக்கன்று நடும் பழக்கத்தை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை தொடங்கியுள்ளார். இதன்படி இந்த கல்வி ஆண்டில் இதுவரை 29 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. மாணவிகள் ஆர்வத்துடன் மரங்களை பராமரிப்பதால் பள்ளி வளாகம் குளிர்ச்சியாகவும் தூய்மையுடனும் காணப்படுகிறது. மாணவிகளின் இந்த செயல்பாடுகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் பள்ளி தலைமையாசிரியைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post