மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி, அணையின் மொத்த நீர்இருப்பு 93.47 டி.எம்.சி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில், நேற்று நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 11,000 கன அடியில் இருந்த நிலையில் தற்போது 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.22 அடியாகவும், அணையின் நீர்இருப்பு 88.105 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத் தேவைக்கு விநாடிக்கு 10,000 கனஅடியும் , கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு 13.60 மில்லி மீட்டர் அளவாக பதிவாகியுள்ளது.
Discussion about this post