ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்த நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1997-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங் நகரத்தை சீனாவிடம் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் அரை தன்னாட்சி முறை கொண்டுவரபட்டது. அதாவது, ஹாங்காங்கின் ராணுவம், வெளியுறவு போன்ற சில துறைகளில் தலையிடும் உரிமையை சீனா பெற்றிருந்தது.
இதனால் தனி நாடு கோரி போராட்டங்கள் வெடிக்க, 2017-ம் ஆண்டு ஹாங்காங்குக்கு என தனித்தேர்தல் நடத்தப்பட்டு, ஹாங்காங் முழுமையான தனி நாடாக அறிவிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. ஆனால், தேர்தல் தேதிக்கு முன்னதாகவே, சீன அரசு கைகாட்டும் நபர்கள் மட்டுமே ஹாங்காங் தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற சட்டத்தை 2014-ம் ஆண்டு சீனா புகுத்தியது.
இதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள கான்ட்ரவர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன்’ என்ற சட்டத்திருத்தம் ஹாங்காங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஹாங்காங்கின் அரசியல் தலைவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்படலாம். அதே சமயம்வரி ஏய்ப்பு செய்தால்கூட நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது.
இதனால் இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என நாடாளுமன்றத்துக்கு முன் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் திரண்டதால், ஹாங்காங் நாடாளுமன்றமே ஸ்தம்பித்து போனது. கொட்டும் மழை, குளிர், இரவு என எதையும் பொருட்படுத்தாமல் நகரில் உள்ள முக்கால்வாசி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஹாங்காங்கின் போராட்டத்திற்கு உலக நாடுகள் பலவும் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ஹாங்காங்கின் தன்னாட்சிக்கு ஆதரவாக, G-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதேநேரத்தில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட கூடாது என்றும் குறிபிட்டுள்ளனர்.
Discussion about this post