திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபல தொழில் நிறுவனங்களாக கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த ஸ்டோர் ஆகியவை விளங்குகின்றன.
பழனி தேவவஸ்தானத்திற்கு இணையாக இங்கு பிரசாத பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் இந்த நிறுவனங்களில் வரிவிதிப்புள்ள சில பொருட்களை கணக்கின்றி விற்பனை செய்கின்றனர் என்று புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வருமான வரித்துறையினர் இந்த இரண்டு நிறுவனங்களிலும் இன்று காலையிலிருந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post