திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறி உள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைகள் சுமார் 150ஆண்டுகளுக்கும் முந்தைய தொழிலாக விளங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பூட்டுக்களுக்கு உலக அளவில் தனி மவுசு உண்டு. திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 கிராமங்களில் பரவியுள்ள இத்தொழிலில் சுமார் 50 வகையான பூட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வன்பொருள் மற்றும் எஃகு தளவாடங்கள் தொழிலாளர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு பூட்டுத் தொழிலுக்கான புவிசார் குறியீடு வழங்கும் படி பதிவகத்திற்கு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதே போல் ராஜீவ் காந்தி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கமும் கடந்த 2013ஆம் ஆண்டு புவிசார் குறியீட்டிற்காக மனு தாக்கல் செய்திருந்தது. நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைகளுக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post