கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
சமீபத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கோவையில் உள்ள உக்கடம், கோட்டைமேடு, பிலால் எஸ்டேட், ஜிஎம் நகர் போன்ற பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன், இன்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முகமது யாசின், சனபர் அலி, சதாம் உசேன், உமர் பாரூக், ஜமீசா முபின் ஆகிய 5 பேரின் வீடுகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post