வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளோம் என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ. அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் காவல் விசாரணையை 30-ந் தேதிவரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. இதில் ப.சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் செயலோ, வேட்டையாடுதலோ அல்ல எனவும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்துள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், வழக்கை நாளை காலைக்கு ஒத்துவைத்துள்ளது.
Discussion about this post