எஸ்பிஐ வங்கி தனது வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை தளர்த்து வங்கியின் யோனோ (yono) மொபைல் ஆஃப் மூலம் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்பிஐ அதன் வங்கி பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் மாற்ற திட்டமிட்டு வருகிறது. அதன்படி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை முற்றிலும் ஒழித்து ஆன்லைன் வர்த்தக முறையை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 90 கோடி டெபிட் கார்டு, மற்றும் 3 கோடி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வங்கியின் பரிவர்த்தனைகள் அனைத்தும் எஸ்பிஐ யோனோ என்ற வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனை ஆஃப் மூலம் பிளாஸ்டிக் கார்டுகள் இல்லாத அளவிற்கு கொண்டுவரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் கார்டு இல்லாமல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கவோ, பரிவர்த்தனை பணம் செலுத்தவோ முடியும் என்பதால், 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோனோ கிளைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 1 மில்லியன் யோனோ கிளைகளை வரும் 18 மாதங்களில் நிறுவ உள்ளதாகவும் இதன் மூலம் கார்டு பரிவர்த்தனை இல்லாத நிலை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post