ஓ பேபி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளும் விதமாக நடிகை சமந்தா கணவருடன் ஸ்பெயினிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு திரைத்துறையிலும் ஒரே நேரத்தில் கலக்கும் நடிகையாக சமந்தா வலம் வருகிறார்.தமிழில் கடைசியாக super deluxe படத்தில் நடித்தார்.அதன் பின் தெலுங்கில் மஜிலி, ஓ பேபி திரைப்படத்தில் நடித்தார்.ஓ பேபி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலுமே வெற்றி பெற்றதால் கணவருடன் சிறிது நேரம் செலவிட ஸ்பெயின் சென்றுள்ளார் சமந்தா.
தற்போது,கடற்கரையில் அமர்ந்துக்கொண்டு இருப்பது போல் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அதற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ஹாட் என கமெண்ட் செய்துள்ளனர்.ஸ்பெனிலிருந்து வந்தவுடன் தெலுங்கில் சமந்தா நடித்து கொண்டிருக்கும் 96 ரீமேக்கின் படப்படிப்பில் பிசியாகிவிடுவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
Discussion about this post