நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த கரடியை, வனத்துறையினர் பட்டாசு வெடித்துக் காட்டுக்குள் விரட்டினர்.
மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாகவே யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை ஆகிய வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடித் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் புகுந்து வருகின்றன. கடந்த ஒரு வாரக் காலமாகவே கட்டப்பெட்டு பகுதியில் ஆண் கரடி ஒன்று தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதாக வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கரடியைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை அப்பகுதியில் உள்ள பேரி மரத்தில் அமர்ந்திருந்த கரடியைக் கண்ட சிலர் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்துக் காட்டுக்குள் கரடியை விரட்டினர்.
Discussion about this post