சென்னையில் நடைபெற்ற சாரண சாரணியர் 10-வது மாநில பெருந்திரளணி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினார்களாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் ஊரக தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியான முறையில் இருப்பதாகவும், திமுக ஆட்சியில்தால் முழுவதுமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
Discussion about this post