இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏ.கே 47 வகை துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கையின் கிளிநொச்சி – பளை காவல் பகுதிக்குட்பட்ட கரண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏ.கே 47 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான தோட்டாக்கள் 120ம், கைக்குண்டுகள் 11ம் மற்றும் பி.ஈ 10 என சந்தேகிக்கும் வெடிபொருட்கள் 10 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாதிகள் பயன்படுத்தும் தொலைநோக்கி உட்பட பல்வேறு பொருட்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
யாழ்ப்பாண காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபரான சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post