அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், வரும் டிசம்பர் வரை, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 449 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அரசாணை வழங்கியுள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிப்படைகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், அந்தந்த பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள தகுதியான பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்து, தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ள, அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு 5 மாதங்களுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 12 கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post