காஷ்மீரில் பொதுமக்கள் ஆதார் அட்டை பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதையடுத்து, மற்ற மாநிலங்களை போல் காஷ்மீர் மக்களும் சலுகைகள் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மத்திய அரசின் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்பதால், காஷ்மீரில் பொதுமக்கள் ஆதார் அட்டை பெறுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. காஷ்மீரில் தற்போது 78 % மக்களே ஆதார் பதிவு பெற்றிருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, விரைவில் ஆதார் சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஆதார் அட்டையை பெறவில்லை என்பதால், அவர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post