தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சி குறித்து மனித உரிமைகள் கழகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் மனித உரிமைகள் கழகம் சார்பில் கட்சியின் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதை டாக்டர் சுரேஷ்கண்ணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் பேரூராட்சியின் முன்னாள் தலைவர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களை தலைசிறந்தவர்களாக உருவாக்க, தமிழக அரசு எடுத்துள்ள முயற்சி கல்விக்கென்று தனி கல்வித்தொலைக்காட்சி யாராலும் செய்யமுடியாத சாதனையாகும் என்று தெரிவித்தார்.
Discussion about this post