கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து முதல் போக சம்பா சாகுபடிக்கான பணிகள் துவங்கியுள்ளன.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் பாசன வசதிக்காக ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, முதல் போக சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிராமிய பாட்டு பாடியவாறே பெண்கள் சோர்வில்லாமல் வேலை செய்கின்றனர். தகுந்த நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post