கடலூர் மாவட்டத்தில் இரண்டு வீடுகளின் கதவை உடைத்து சுமார் 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியை அடுத்த சேமகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி, திருமண விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. அருகிலுள்ள, ராஜாவின் தாயார் தங்கியிருந்த வீட்டுக்குள்ளும் நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 பவுன் தங்க நகையயையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Discussion about this post