மக்கள் மலிவுவிலை மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் விலையை ஒரு ரூபாயாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்களில் கவிதா என்ற பெயரில் சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 4 நாப்கின்கள் கொண்ட பாக்கெட் இதுவரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அதன் விலை தற்போது 4 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சானிட்டரி நாப்கின்களுக்கான விலையை 60 சதவீதம் வரை குறைத்ததன் மூலம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக உரம் மற்றும் ரசாயனத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Discussion about this post